திருச்சி திருவெறும்பூர் கணேசா மேம்பாலத்தில் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மீது பஞ்சப்பூரிலிருந்து துவாக்குடிக்குச் சென்ற அரசு டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் உருக்குலைந்ததுடன், ஓட்டுநரின் காரும் முறிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தைச் சீரமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.