திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் ஆய்வில், கணக்கில் வராத ரூ. 1,06,000 பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் இந்தப் பணத்தை இடைத்தரகர்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோர் அதிகாரிகளுக்காக லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, இடைத்தரகர்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.