நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர்
விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, நாளை மறுநாள் (ஜூன் 1) திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர்
விஜய் பேச உள்ளார். திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. முதல்வர் வருகையை ஒட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.