தவெக தலைவர்
விஜய், முதல்-அமைச்சராக
பதவி ஏற்ற பிறகு, தான் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்குச் செல்கிறார். செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். பாதுகாப்பு கருதி, கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிகள், சிறுவர்கள், மூத்த குடிமக்கள் போன்றோருக்கு அனுமதி இல்லை என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.