திருச்சி: விபத்தை ஏற்படுத்தும் மரண குழி

57பார்த்தது
திருச்சி: விபத்தை ஏற்படுத்தும் மரண குழி
திருச்சி, மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 33 ஆட்டுக்காரத் தெரு, மஞ்சனக்காரத் தெரு அருகில் நியாய விலை கடை, பொது கழிப்பிடம், மற்றும் நகர்புற நல்வாழ்வு மையம் பகுதியில் பல மாதங்களாக ரோட்டின் மையப்பகுதியில் மரணக்குழி உள்ளது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியாகும். 

இந்த சூழலில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த மரணக்குழியை மூடுவது தொடர்பாக இதுவரை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த மரணக்குழியில் விழுந்து யாராவது உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி