SiR படிவங்களை திமுகவினர் விநியோகம் - அதிமுக புகார்

3பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் அதிமுகவினர் மனு அளித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என்றும், எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த மனுவில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், புறநகர் வடக்கு செயலளார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி