திருவரம்பூரில் திமுக வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்

4பார்த்தது
திருவரம்பூரில் திமுக வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, பொன்மலை பகுதிக்கு உட்பட்ட 44-ஏ வார்டில், பூத் எண் 191-ல் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மற்றும் மண்டலம் 3 தலைவர் மு. மதிவாணன் தலைமை தாங்கினார். இதில் பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ், வட்ட செயலாளர் துரை, வாக்குச்சாவடி மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி வாக்குச்சாவடி அமைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி