திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த கார் உரிமையாளர்கள் வாடகைக்கு கார் ஓட்டுவதை தடுக்க வேண்டும், அரசு அனுமதி இன்றி ஆன்லைனில் செயல்படும் கால் டாக்ஸி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.