திருச்சி மாநகராட்சி தரைக்கடைகளை அகற்றியதை கண்டித்து, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று டிசம்பர் 1ஆம் தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.