திருச்சி பொன்மலை மற்றும் பாலக்கரை பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் அருகே ஜிஷ்ணு என்பவரும், மேலப்புதூர் பஸ் ஸ்டாப் அருகே துவாரகன் என்பவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.