திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 84 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 22 பேர், பாலியல் குற்றவாளி மூன்று பேர், மணல் கடத்திய ஒருவர், ரேஷன் அரிசி கடத்தி விற்ற இரண்டு பேர், செயின் பறிப்பு திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 12 பேர் அடங்குவர். இந்த தகவலை திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.