மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை (வெள்ளிக்கிழமை) தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவர் திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி, மறுநாள் (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்று பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருடன் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திருச்சியில் முகாமிடுகின்றனர். இந்த நிலையில், அமித் ஷா தலைமையில் தமிழக தேர்தல் நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடக்க வாய்ப்புள்ளதாக பா.ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.