தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதியில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட தீபம், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கை, மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானை பக்திபரவசத்துடன் வழிபட்டனர். இந்த மகாதீபம் தொடர்ந்து 3 நாட்கள் இரவும் பகலும் எரியும்.