திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற, மூளை நரம்பியல் ஆய்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நரம்பியல் துறை தலைவர் மருத்துவ நிபுணர் அலீம் அவர்கள் பேசியது: மனித வாழ்க்கையில் கனவு என்பது மிக முக்கியமான அம்சமாகும் உள்ளது. அதாவது மூளை இயக்கத்தின் ஒருவித அதிர்வுகள் காரணமாக மூளையில் பதிந்துள்ள நினைவுக் குறிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவுகள் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு குறிப்புகள்.
ஆனால் மருத்துவ ஆய்வுகளுக்கு முன்பே சங்க கால நமது தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், அகத்தியம், கலித்தொகை, ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை, உள்ளிட்டவைகளில் மிகவும் அழகாக காட்சிகளுடன் தொடர்புபடுத்தி கனவுகள் குறித்து குறிப்பிட்டிருப்பது நம்மை மட்டுமல்ல உலக மருத்துவத் துறையையே வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
நமது மூளையில் பதிவான நினைவுகளை தூக்கத்தின் போது வெளிப்படுத்தும் விதமாக, குறிப்பிட்டு கூறப்போனால் செயல்படுத்த முடியாத சில நிகழ்வுகளை கூட செயல்படுத்தியதாக காட்சிப்படுத்துவது கனவு. இது மருத்துவ ஆய்வுகளுக்கு பின்னர் வெளியிடப்பட்ட முடிவு. ஆனால் இவற்றுக்கு முன்பே கனவுகள் குறித்து தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என பேசினார்.