திருச்சி: அண்ணாமலையை முதலில் திருத்தனும்; வீரமணி

69பார்த்தது
திருச்சி: அண்ணாமலையை முதலில் திருத்தனும்; வீரமணி
இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு பகுத்தறிவாளர்கள் கழகமும் இணைந்து நடத்தும், 13-ஆவது, இரண்டு நாள் தேசிய மாநாடு திருச்சியில் சனிக்கிழமை(டிச.28) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சனாதனவாதிகள் நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு உதாரணமே அண்ணாமலை நடத்திய சாட்டையடிப் போராட்டம். நாம் 21-ஆம் நூற்றாண்டில் இருக்கையில், அவர் மக்களை 2-ஆம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்லப் பார்க்கிறார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் உயர்ந்த பதவிகளில் அமர வேண்டும் என்பதற்காகவே பெரியார் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். 

அதன்பயனாக கிடைத்த சமூக நீதியின் மூலம் ஐபிஎஸ் என்ற அந்தஸ்தை பெற்று, காவல்துறையில் உயர்ந்த பதவிக்கு சென்றவர் அண்ணாமலை. அத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தவர் இப்போது, இந்த நிலைக்கு ஆளாகிவிட்டாரே என்பதை நினைத்து பரிதாபம் கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் பலரையும் திருத்த வேண்டிய பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். அந்த பணியில் முதலில் திருத்த வேண்டிய நபராக அண்ணாமலை உள்ளார் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி