திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த அண்ணாதுரை, பத்மினி மற்றும் லலிதா ஆகியோரை ஒரே வீட்டில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். மது போதையில் அண்ணாதுரை பத்மினியை துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த பத்மினி அவரை கொலை செய்தார். இந்த வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பத்மினிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.