போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது

828பார்த்தது
போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
சனிக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீ. முத்துச்சாமி (60) என்பவர், விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது போலி கடவுச்சீட்டு மூலம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி பீயூலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், திருச்சி விமான நிலையக் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து முத்துச்சாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி