திருச்சியில் சாலையோரம் தூங்கியவர் வாகனம் மோதி உயிரிழப்பு

75பார்த்தது
திருச்சியில் சாலையோரம் தூங்கியவர் வாகனம் மோதி உயிரிழப்பு
திருச்சி லால்குடி அக்ரஹாரம் மணக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாலு கூலி தொழிலாளி இவர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நண்பர் கார்த்திக் என்பவர் அறை எடுத்து கூலி வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் பாலு எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு டைல்ஸ் கடை முன் நேற்று அதிகாலை 5 மணி அளவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இது குறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பாலுவின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி