திருச்சி உறையூர் லிங்க நகரைச் சேர்ந்த பைனான்சியர் கார்த்திக்கிடம், விக்டர் என்பவர் பலமுறை கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இந்நிலையில், மேலும் ₹30,000 கடன் கேட்டுள்ளார். ஏற்கனவே வாங்கிய கடனைத் தராததால் கடன் தர முடியாது என கார்த்திக் கூறியதால், நேற்று அண்ணா சிலை அருகே கார்த்திக்கை விக்டர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.