மணப்பாறையில் பைக் திருடிய நபருக்கு 20 மாதம் சிறை

382பார்த்தது
மணப்பாறையில் பைக் திருடிய நபருக்கு 20 மாதம் சிறை
மணப்பாறை அருகே சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்த பரணி செல்வம் என்பவரின் இரு சக்கர வாகனத்தை 2023ல் திருடிய வழக்கில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் மணப்பாறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆகாஷ் குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 20 மாதங்கள் சிறை தண்டனை நீதித்துறை நடுவர் அசோக்குமார் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி