மணப்பாறை அருகே போடங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சின்னதுரை, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.