மணப்பாறை அடுத்த பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதிக்கு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரைச் சேர்ந்த ஜியோஸ் ராஜாமணி கடந்த 2023 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்தாமல், பூபதிக்கு ஜியோஸ் ராஜாமணி கொடுத்த செக் பணமின்றி திரும்பி வந்தது. இது தொடர்பாக பூபதி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி அசோக்குமார் விசாரணை முடிந்து, ஜியோஸ் ராஜாமணிக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.