திருச்சி தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திமுகவில் இணைந்தனர். மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சம்சாத் பேகம் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.