திருச்சி புத்தூர் நான்கு ரோடு முதல் வயலூர் சாலை வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகள் பெருகிவிட்டன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்து, கடைகளை ஒழுங்குபடுத்தி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.