முசிறி அருகே பாம்பு கடித்து கோழி பண்ணை தொழிலாளி சாவு

74பார்த்தது
முசிறி அருகே பாம்பு கடித்து கோழி பண்ணை தொழிலாளி சாவு
முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேய்ங்கல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 60 அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். 

சம்பவம் நடந்த கடந்த 9ஆம் தேதி அன்று கோழிப்பண்ணையில் பணியில் இருந்தபோது அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து உயிரிழந்த செல்வத்தின் மகள் சசிகலா கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி