வாளாடி துணைமின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்

0பார்த்தது
வாளாடி துணைமின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் வாளாடி துணைமின் நிலையங்களில் நாளை (06.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாத்துரை, கீழ்மாரிமங்கலம், திருமங்கலம், மாந்துறை, நெய்க்குப்பை, ஆர். வளவனூர், பல்லபுரம் புதூர் உத்தமனூர் ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி