திருச்சி மெயின்கார்டுகேட் துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் பைபாஸ் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ் நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேஷன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருச்சி மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.