புதுக்கோட்டை: உயிரிழந்த செவிலியர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி

1530பார்த்தது
புதுக்கோட்டை: உயிரிழந்த செவிலியர் மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் உதவி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள், சக செவிலியர் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. உயிரிழந்த மாணவியின் சகோதரி புவனேஸ்வரிக்கு அரசு சார்பில் தற்காலிக செவிலியர் பணி நியமன ஆணை குடும்பத்தினருக்கு இலவச வீடு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அமைச்சர் முகமது பர்வேஸ்,  ஆட்சியர் அருணா ஆறுதல் கூறினர்.

தொடர்புடைய செய்தி