திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் தாய்லாந்து பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, நான்கு அரியவகை மஞ்சள் முக மைனாக்களும், மூன்று அரியவகை குரங்குகளும் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.