திருச்சி அற்புதசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் சதீஷ்குமார், நேற்று கேகே நகரில் பொருள் வாங்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இது குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.