திருச்சி சாலையில் ஓடும் சாக்கடை சரிசெய்ய கோரிக்கை

1502பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சித்தாம்பூர் அரசு தொடக்கப் பள்ளியின் அருகில் மெயின் ரோட்டில் சாக்கடை வழிந்து செல்வதால், வாகனங்களில் செல்பவர்கள் மீது சாக்கடை தண்ணீர் பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் குடிநீர் எடுத்துச் செல்லும் குடங்களிலும் சாக்கடை நீர் படும் அபாயம் உள்ளது. இதனால், குடிநீர் மூலம் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து கிளர்க் அவர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி