தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு

0பார்த்தது
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். திருச்சி கடைவீதிப் பகுதிகளான என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் ஆர்ச் உள்பகுதி, சிங்கார தோப்பு பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் தங்களை, தற்போதுள்ள இடங்களில் இருந்து அகற்றி மாற்று இடம் தரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது மண்டலங்களாகப் பிரித்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத பட்சத்தில் யானைக்குளம் பகுதியில் கடை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி