திருச்சி சென் ஜோசப் கல்லூரியில் நேற்று நடைபெற்ற முதல்வர் ஜோசப் விஜய்யின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டையுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.