திருச்சி மாவட்டம் தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அனலாடீஸ்வரரை வழிபட்டனர். இந்த நிகழ்வு பக்தர்களின் பெரும் கூட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.