திருச்சி: போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது

1பார்த்தது
திருச்சி: போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கே.கே. நகா் போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஆா். நாகராஜன் (23), ஆா். கோகுல் (23), எம். ஜெயராமன் (26) ஆகியோரை விசாரித்ததில், அவா்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள 97 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

தொடர்புடைய செய்தி