திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில், 55வது வார்டுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" என்ற தலைப்பில் AIADMK Connect செயலியை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகள் குறித்து துல்லியமாக எடுத்துக் கொடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.