திருச்சி: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

2பார்த்தது
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் திமுக மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக மாமன்ற குழுத்தலைவர் அம்பிகாபதி, பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதியை முழுமையாக செலவழித்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வார்டுகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். இதனால் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் கோ. கு. அம்பிகாபதி, அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்தி