திருச்சி: அதிமுக மலைக்கோட்டை வடக்கு பகுதி கழக ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மலைக்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் முத்துகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி தலைவர் G. நாகு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராதா. வேங்கடநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக பொதுச் செயலாளரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர வைக்க கழக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி