திருச்சி: மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

0பார்த்தது
திருச்சி மாநகராட்சியில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் முத்துச்செல்வன் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகாபதி மற்றும் அரவிந்த் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், இந்த ஆண்டும் அதே நிலைதான் நீடிக்கும் என்றும் குற்றம் சாட்டினர்.