திருச்சி ஏர்போர்ட்-மலேசியா செல்லவிருந்த மூதாட்டி உயிரிழப்பு

0பார்த்தது
திருச்சி ஏர்போர்ட்-மலேசியா செல்லவிருந்த மூதாட்டி உயிரிழப்பு
மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி விசாலாட்சி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று முன்தினம் மலேசியா செல்லும் விமானத்தில் ஏறத் தயாரானபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகள் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி