திருச்சி: விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு வரவேற்பு

434பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காரைக்காலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக மற்றும் தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் வரவேற்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி