திருச்சி மனைவி பிரிந்ததால் பிரியாணி கடைக்காரர் தற்கொலை

71பார்த்தது
திருச்சி மனைவி பிரிந்ததால் பிரியாணி கடைக்காரர் தற்கொலை
திருச்சி தாராநல்லூர் செக்கடி பஜார் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு பிரியாணி கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான திருநாவுக்கரசு போதையில் மனைவி மற்றும் பிள்ளைகளை நாள்தோறும் துன்புறுத்தி வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த அவர் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முசிறியில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

இதனால் மன உளைச்சலில் இருந்த திருநாவுக்கரசு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநாவுக்கரசு உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி