திருச்சி: கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் ஒப்படைப்பு

0பார்த்தது
திருச்சி: கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் ஒப்படைப்பு
திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பலால் தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த தாமரைச்செல்வன் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினர். பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி