திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் (27). இவருக்கும் குமாரி (25) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதனிடையே சுபாஷ், வேறு ஒரு பெண்ணுடன் கைப்பேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விரக்தியடைந்த சுபாஷ், நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.