திருச்சி புத்தூர் தொட்டி பாலம் உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, சுமார் 1½ அடி உயரமும், 4 கிலோ எடையும் கொண்ட வெண்கல சாமி சிலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் கையில் சிக்கியது. இது விஷ்ணு சிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிலையை சுத்தம் செய்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி, சிலையை மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.