திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமை கட்டணம் தற்போது இணையதளம் மூலம் வசூல் செய்யப்படுகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயமாகும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.