திருச்சி: அடிக்கடி பெயர்ந்து விழும் மாநகராட்சி மேற்கூரை

1பார்த்தது
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள மாவட்ட கூட்டு அரங்கத்தின் தகர மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது. ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மாலை ஒரு தகரம் விழுந்துள்ளது. இது ஊழியர்கள், உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் மீது விழுந்து காயம் ஏற்படுவதற்கு முன்பே சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி