திருச்சி முருங்கப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்குள் சுமார் 10 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஒன்று இன்று காலை ஊர்ந்து வந்து தஞ்சம் புகுந்துள்ளது. பொதுமக்கள் முதலை படுத்திருப்பதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கால்வாய் வழியாக முதலை ஊருக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், முதலையைப் பிடித்து பாதுகாப்பான பகுதியில் விட்டனர்.