திருச்சியில் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல் - டர்பைன் நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல் திருவெறும்பூர் - கே. எஃப். டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி நிலையங்களிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மரக்கடை, விறகுப்பேட்டை, சிந்தாமணி, ராக்போர்ட், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், ஆலத்தூர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு டிசம்பர் 3 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.