திருச்சி கே கே நகர் ரோடு இரண்டாவது மெயின் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜ் இவரது மகள் டெய்சி லில்லி இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாபார்வதி அவரது மகள் விசாலாட்சி ஆகியோர் நடத்தி வந்த தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேர்ந்துள்ளார். இதில் அவர் செலுத்திய ரூ.9.40 லட்சம் தொகைக்கான லாபத்துடன் தீபாவளிக்கு மறுநாள் தொகையை தருவதாக கூறியபடி திருப்பி தரவில்லை. அசல் தொகையும் தரவில்லை.
இதுபோல் மேலும் பலரிடம் தொகையை பெற்று ஏமாற்றி உள்ளதாக நடவடிக்கை எடுத்து தொகை பெற்று தருமாறு லில்லி திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடியில் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் திருச்சி மன்னார்புரம் அப்துல் சலாம் தெருவில் முதல் தளத்தில் அமைந்துள்ள திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் சுகந்தி தெரிவித்துள்ளார்.